பட்டதாரி பெண் மாயம் போலீசில் புகார்!

பட்டதாரி பெண் மாயம் போலீசில் புகார்!
X
காணவில்லை
திருமயம்: அரிமளம் ஒன்றியம் தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் ரெங்கனாதன்(50). இவரது மகள் பிரசன்னா (25).எம்எஸ்சி பட்டதாரி. அரசு பணிக்காக தேர்வு எழுதினார். வேலை கிடைக்கவில்லை. இதனால் மனம் வருந்தி வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் கே.புதுப்பட்டிக்கு சான்றிதழ்களை ஜெராக்ஸ் எடுக்கச் செல்வதாக கூறி வெளியேறியவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடினர். எங்குமே காணவில்லை. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.இது குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Next Story