விழுப்புரம் தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

X

வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், கல்வியாண்டு முழுதும் நடந்த வேலை வாய்ப்பு முகாம்களில் தேர்வான மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.இ.எஸ்., கல்விக்குழுமம் நிர்வாக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, கல்லுாரியின் சிறப்பு அம்சங்கள், வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் மாணவிகள் பெற்ற பயன்கள் பற்றி கூறினார்.804 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.ஆண்டிற்கு 4 லட்சம் முதல் 8.50 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கும் முன்னணி நிறுவனங்களில் மாணவிகள் பணி நியமன ஆணை பெற்றனர்.
Next Story