நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில்
நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் வேளாங்கண்ணி பேருந்து நிலையம் ஆகியவற்றில், நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் ஆகியோர் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன், கீழ்வேளூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் திலீப், கீழையூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாலகுரு ஆகியோர், உணவு பாதுகாப்பு குறித்த செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவித்தனர். கடைகளில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை வாங்கும்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் எண், சைவமா, அசைவமா என்ற குறியீடு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பார்த்து வாங்க வேண்டும். உப்பு, பால், அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றின் பாக்கெட்டுகளில் F+ என்ற குறியீட்டுடன் உள்ள நுன் சத்துக்களைக்கொண்டு செறிவூட்டப்பட்ட உணவு வகைகளை பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தக் கூடாது. உணவு விற்பனையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மாநில உணவு பாதுகாப்பு ஆணையரகத்தின் 9444042322 என்ற வாட்ஸ்அப் புகார் எண்ணில் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். எனவே, அனைத்து பொதுமக்களும் உணவு பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு என்பதை உணர்ந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
Next Story



