வள்ளியிரச்சல் சாலையில் போக்குவரத்தை பாதிக்கும் வேப்ப மரம்

வெள்ளகோவில் அடுத்துள்ள வள்ளியிரச்சல் சாலையில் போக்குவரத்தை பாதிக்கும் வேப்ப மரம்
வெள்ளகோவில் வள்ளியிரச்சல் சாலையில் உள்ள வேப்ப மரம் போக்குவரத்தைப் பாதித்து வருகிறது. வெள்ளகோவில் முத்தூர் சாலையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வள்ளியிரச்சல் செல்லும் சாலையில் பாப்பம்பாளையம் பிரிவு அடுத்து சாலை வளைவில் ஒரு பெரிய வேப்ப மரம் உள்ளது. இந்த வளைவில் ஏற்கனவே சாலை குறுகலாக இருக்கும் நிலையில் எதிர் வரும் வாகன ஓட்டுநர்களுக்கு மரம் இருப்பது சரிவர தெரிவதில்லை. இதனால் அருகில் வந்து திடீரென வாகனங்களை நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வப்போது உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே இடையூறாக உள்ள மரத்தை அகற்ற மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story