திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
X
காச நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திட்டச்சேரி மருத்துவ அலுவலர் சாய் பிரசாத் தலைமை வகித்து, காசநோய்க்கான அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் பங்கு, காசநோய்க்கான சிகிச்சை மற்றும் பரிசோதனை முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் பரமநாதன், செவிலியர் ஹேமா செல்வி மற்றும் மருத்துவ உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில், மருந்தாளுனர் சக்திவேல் நன்றி கூறினார்.
Next Story