கோவை: எண்ணெய் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் அபராதம் !

கோவை: எண்ணெய் நிறுவனத்திற்கு ஒரு லட்சம் அபராதம் !
X
சிலிண்டரை விநியோகம் செய்த ஏஜென்சி மற்றும் அதன் பங்குதாரர்கள் மன உளைச்சலுக்கு 20,000 ரூபாயும், எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி கொடுக்கும் எண்ணெய் நிறுவனம் 1 லட்சம் ரூபாயும் அபராதமாக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவு.
கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் பகுதியைச் சேர்ந்த நிர்மல் காளிநாத், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023-ம் ஆண்டு புதிய சிலிண்டர் கேட்டு பதிவு செய்ததாகவும், ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் 30 கிலோ 100 கிராம் இருக்க வேண்டியதற்கு பதிலாக 27 கிலோ 200 கிராம் மட்டுமே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்து கேட்டபோது எரிவாயு விநியோக நிறுவனத்தினர் முறையான பதில் அளிக்கவில்லை என்றும், அடுத்த முறை முன்பதிவு செய்தபோதும் இதே நிலை ஏற்பட்டதாகவும் அவர் புகார் அளித்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், சிலிண்டரை விநியோகம் செய்த ஏஜென்சி மற்றும் அதன் பங்குதாரர்கள் மன உளைச்சலுக்கு 20,000 ரூபாயும், எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி கொடுக்கும் எண்ணெய் நிறுவனம் 1 லட்சம் ரூபாயும் அபராதமாக முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Next Story