கோவை: முன் பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உத்தரவு !

X

முன்பணம் செலுத்தினால் வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
கோவை திருமால் நகரைச் சேர்ந்த ரவிசங்கர் தனது வீட்டில் வயதானவர்கள் வசிப்பதால் லிஃப்ட் பொருத்த முடிவு செய்தார். இதற்காக சென்னை அடையாறில் உள்ள லிஃப்ட் நிறுவனத்தை அணுகியபோது ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் செலவாகும் என்று கூறினர். அதனை ஏற்று முன்பணமாக ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தினார். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் லிஃப்ட் பொருத்த தாமதம் செய்தனர். ஒப்புக்கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றாததால் முன்பணத்தைத் திரும்பத் தருமாறு ரவிசங்கர் கோரினார். ஆனால், அந்த நிறுவனம் பணத்தைத் திருப்பித் தர மறுத்துவிட்டது. இதையடுத்து, ரவிசங்கர் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், நிறுவனம் ஒப்புக் கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றாததால் முன்பணத்தை திரும்ப தருமாறு விண்ணப்பித்தேன். ஆனால், அதை திரும்ப தரவில்லை. எனவே, முன்பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் அதிரடி தீர்ப்பு வழங்கினர். அதில், லிஃப்ட் நிறுவனம் முன்பணம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்தை 9 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்றும், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், நீதிமன்ற செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Next Story