கோவை: குடியிருப்பு கட்டிட அனுமதி எளிமையாக்கம் - ஆட்சியர் தகவல் !

கோவை: குடியிருப்பு கட்டிட அனுமதி எளிமையாக்கம் - ஆட்சியர் தகவல்  !
X
கட்டிட அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்கவும், கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை செலுத்துவது எளிமையாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல.
கோவை மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிட அனுமதி நடைமுறையை எளிமையாக்கி, மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவை ஊராட்சி பகுதிகளில் 2,500 சதுர அடி வரையிலான இடத்தில் 3,500 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டிடம் கட்ட சுயசான்றின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரை அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு ஒற்றைச்சாளர முறையில் சுயசான்றின் அடிப்படையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உடனடி அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் குடியிருப்பு கட்டிட அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்டிட அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்களை தவிர்க்கவும், கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை செலுத்துவது எளிமையாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டிட அனுமதி பெறுவதில் இடைத்தரகர்களை தவிர்த்து, மக்கள் நேரடியாக விண்ணப்பித்து சுய சான்று மூலம் அனுமதி பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story