தென் குருசுமலை திருப்பயணம்  இன்று துவக்கம்

தென் குருசுமலை திருப்பயணம்  இன்று துவக்கம்
X
பளுகல்
குமரி மாவட்டம் பளுகல் அருகே  தென் குருசுமலை 68வது திருப்பயணம் இன்று 30 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்சிலுவை அன்பின் இதயத்துடிப்பு எனும் மைய சிந்தனையுடன் இந்த ஆண்டு திருப்பயணம் இன்று மாலை துவங்கி ஏப்ரல் 6.ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.       துவக்க நாளான இன்று மதியம் 2:30 மணிக்கு வெள்ளறடையிலிருந்து மலை அடிவாரம் வரை நெய்யாற்றின்கரை மறை மாவட்ட கே சி ஒய் எம் சார்பில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு குருசுமரை புனித பத்தாம் பியூஸ் தேவாலயம் முதல் அடிவாரம் வரை திருப்ப யணகொடி பயணம் நடக்கிறது. 4:30 மணிக்கு மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் திருப்பயணக்கொடி ஏற்றுகிறார்.      தொடர்ந்து அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை செம்பூர் பங்குத்தந்தை ஜஸ்டின் பிரான்சிஸ் தலைமையில் திவ்யஜோதி பயணம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மலை உச்சியில் கொடியேற்றப்படுகிறது.      மாலை 6:30 மணிக்கு அடிவாரத்தில் ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமையில் துவக்க விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. அனில் துவக்கி வைக்கிறார். குருசுமலை இயக்குனர் வின்சென்று பீட்டர் துவக்கவுரை ஆற்றுகிறார். மற்றும் கேரள முன்னால் எம் பி முரளிதரன், பாறசாலை எம்எல்ஏ ஹரேந்திரன், விளவங்கோடு எம் எல் ஏ தாரகை கத்பட் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
Next Story