ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நியாய விலை கடை திறப்பு

தேவிபட்டினம் ஊராட்சி ஒன்றிய பயணிகள் நிழற்குடை மற்றும் ரேஷன் கடையை எம்.எல்.ஏ.கரு.மாணிக்கம் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசுமருத்துவமனை அருகே திருவாடானை எம். எல். ஏ. சி. டி திட்டத்தில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடையை திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் திறந்துவைத்தார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நெல் குடையை எம்எல்ஏ கருமாணிக்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் இதே போல பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன் கடையை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து விற்பனையை துவக்கி வைத்தார் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கத்திற்கு நன்றி தெரிவித்தனர் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர் இவ்விழாவில் ராமநாதபுரம் காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பினரும் ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினருமான ராஜாராம்பாண்டியன் ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன் ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, மாவட்ட பொதுச்செயலாளர் கார்மேகம் அன்சாரிசேட், ஆறுமுகம் மற்றும் ஏராளமான காங்கிரஸ்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Next Story