ராமநாதபுரம் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை சார் ஆட்சியர் திறந்து வைத்தார்

X

கமுதி அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தை பரமக்குடி சார் ஆட்சியர் அபிலசா கவுர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள வலையபூக்குளம் கிராமத்தில் கோவையை சேர்ந்த ஜிகேடி தொண்டு நிறுவனம் சார்பில், ரூ.27.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.ஜிகேடி தொண்டு நிறுவன அலுவலர்கள் கார்த்திகேயன், செல்வக்குமார், மருதநாயகம், பொறியாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன அதிகாரிகளுக்கு சார் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சந்திரசேகர், சந்திரமோகன்(கிராம ஊராட்சிகள்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியேந்திரன், வீரபாண்டி, பரமசிவம், கமுதி வட்டாட்சியர் காதர் முகைதீன், அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் சரசு, தமிழரசி, மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வலையபூக்குளம் ஊராட்சி செயலர் கார்த்திக்செல்வன் செய்தார்.
Next Story