திருக்குவளை கிராம விவசாய நிலத்தில் அதிக மகசூல் தரும் ஊட்டச்சத்து நுண்ணூட்டம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், இறுதி ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின்கீழ், திருக்குவளை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.இதன் அடிப்படையில், தற்போதைய வேளாண் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தினர். இதில், பயறு வண்டர் எனும் பயிர்களில் அதிக மகசூல் காணும் ஊட்டச்சத்து நுண்ணூட்டத்தினை பயன்படுத்தும் முறையை, நேரடி செயல் விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தனர். இதில், கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஜீவா, ராகேஷ், கரண், ஸ்ரீநாத் , கௌதம், துரையரசு ஆகிய மாணவர்கள் செயல் விளக்கத்தினை ஆர்வமுடன் செய்தனர்.
Next Story



