நர்சரி பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு!

தூத்துக்குடி ஜாண்சன் நர்சரி
தூத்துக்குடி ஜாண்சன் நர்சரி & பிரைமரி பள்ளியில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி ஜாண்சன் நர்சரி & பிரைமரி பள்ளியில் மார்ச் 29, 2025 அன்று POCSO சட்டம் குறித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகள் பாதுகாப்பு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் பேசப்பட்டன. தமிழக அரசு விதவை மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியத்தின் உறுப்பினர் வழக்கறிஞர் சொர்ணலதா விழிப்புணர்வு உரையாற்றினார். அவர் POCSO சட்டம் மட்டுமின்றி POSH (Prevention of Sexual Harassment) சட்டம், பள்ளிகளில் உள்ளக புகார் குழு (ICC - Internal Complaints Committee) மற்றும் பாலியல் தொல்லை தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் செல்வராஜ், நிறுவனர்/முதல்வர் பாத்திமா ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு கூட்டத்தினை சிறப்பித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தலைமையாசிரியை ஜூஅனா கோல்டி, ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்தார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story