புலியூர் அருகே புளியமரகிளை ஒடிந்து விழுந்து மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

புலியூர் அருகே புளியமரகிளை ஒடிந்து விழுந்து மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
புலியூர் அருகே புளியமரகிளை ஒடிந்து விழுந்து மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம், ஏமூரை அடுத்த சீத்தப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் தென்னரசு வயது 16. இவர் ஏமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் காந்திகிராமத்தில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதி வந்தார். கடந்த 27ம் தேதி அக்கவுண்டன்சி தேர்வை எழுதி முடித்து விட்டு, தனது டூ வீலரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கரூர் - திருச்சி சாலையில் புலியூர், கவுண்டம்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்த போது, அங்கு சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் கிளை முறிந்து மாணவர் மீது விழுந்தது. இதில் மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கோவையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் மீது மரக்கிளை முறிந்து விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story