தர்பூசணி தோட்டங்களில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

தர்பூசணி தோட்டங்களில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு
தர்பூசணி பழங்களில் ஊசி மூலம் பழத்தை சிவப்பாக மாற்ற முடியாது: வதந்தி பரவுவதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து விளக்கம். தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு திருவள்ளூர் மாவட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்யப்படும் விவசாயிகளின் வயல்களில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரடியாக பழங்களின் தரத்தை ஆய்வு செய்தனர். பழங்களில் நிறத்திற்காகவும் சுவைக்காகவும் ஊசி போடப்படுவதில்லை இயற்கையாகவே பழங்களில் தேவையான நிறமும் சுவையும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் அவ்வாறு செலுத்த முற்படும்போது பழங்கள் தன்மையை இழந்து உடனடியாக கெட்டுவிடும். எனவே பழங்களில் எந்தவிதமான கலப்படமும் செய்யப்படுவதில்லை. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். கோடைகாலங்களில் உடலுக்கு குளிர்ச்சியையும் பல்வேறு விதமான நன்மைகளையும் தரும் தர்பூசணி பழங்களை எந்தவித பயமும் இன்றி சுவைக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஐ.ஜெபக்குமாரி அனி தெரிவித்துள்ளார்
Next Story