மாணவியிடம் பாலியல் சில்மிஷம் தொழிலாளி கைது

பாலக்கோடு அருகே மாரண்டள்ளியில் பிளஸ்2 மாணவியிடம் பாலியல் சில்மிஷம் தொழிலாளி போக்சோவில் கைது
தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி அருகே வசித்து வரும் கூலி தொழிலாளியின் 17 வயது மகள். பிளஸ் 2 தேர்வு எழுதி உள்ளார். நேற்று மதியம், மாணவி தங்களது கால்நடைகளை கவனிக்க, அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்று உள்ளார்.அப்போது, பெல்லு அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல் என்பவர், மாணவியை பின்தொடர்ந்து சென்று, திடீரென பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் பயந்து போன மாணவி, அங்கிருந்து ஓடி வந்து, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், பாலக்கோடு அனைத்து மகளிர் க்கவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், காவல் ஆய்வாளர் வீரம்மாள் இன்று சக்திவேலை கைது செய்தனர்.
Next Story