இண்டூரில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

இண்டூரில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் பங்கேற்பு
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் இண்டூரில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த திண்ணை பிரச்சாரத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே பி அன்பழகன் எம் எல் ஏ மற்றும் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு இண்டூர் பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி நெடுஞ்சாலை வரை சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். திண்ணை பிரச்சாரத்தில் அதிமுக செய்த சாதனைகளை எடுத்துரைத்து பின்னர் திமுக அரசு மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்ததையும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொது மக்களிடம் எடுத்துரைத்தனர்.இந்நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம்,மாவட்ட பிரதிநிதி பொன்னுவேல், மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Next Story