நீர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

நீர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
X
ஊர்வலம்
திருக்கோவிலுார் வேளாண் துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி இணைந்து சர்வதேச காடுகள் மற்றும் நீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதலுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். துணை வேளாண் அலுவலர் மொட்டையாப்பிள்ளை, உதவி வேளாண் அலுவலர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நீர் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பு அவசியம் குறித்து விளக்கினர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மரம் மற்றும் நீரை காப்போம் எனும் தலைப்பில் மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடந்தது. காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.
Next Story