தீப்பிடிந்து எரிந்த பைக் கார் - விசாரணை

X
குளச்சல் அருகே வாணியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேசுபாலன் (55). இவர் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி விசைப்படகில் மீன் பிடித்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி அனிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் அனிதா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மற்றும் கார் தீப்பிடித்து எரிவதை ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ எரிந்து கொண்டிருந்த பைக் மற்றும் காரை தண்ணீரை அடித்து அணைத்தனர் . எனினும் தீயில் கருகி பைக் முற்றிலும் சேதமடைந்தது. காரின் முன் பகுதி மட்டும் சேதமடைந்தது. நேற்று காலை குளச்சல் போலீசார் . சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தடயவியல் நிபுணர்கள் வர உள்ளனர். அவர்கள் வந்த பிறகு தீ பிடித்ததற்கான முழு விவரம் தெரிய வரும். இந்த சம்பவம் குறித்து போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

