குளச்சல் : டாஸ்மாக் கடையை அகற்ற ஆர்ப்பாட்டம்

X
குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மண்டைக்காடு அருகே வெட்டுமடையில் நேற்று நடந்தது. தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், ரீத்தாபுரம் பேரூராட்சி துணை தலைவர் விஜி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதர காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பியூட்லின் ஜீவா, ஜாக்சன், லிபின் ராஜ், சுஜி நிர்மல், அபினேஷ், நந்து, மதியழகன், ஆல்பர்ட், மணிகண்ட பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வரும் ஏப்ரல் 4 -ம் தேதி குளச்சலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, குளச்சல் தொகுதி அனைத்து பூத்துகளிலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமிப்பது, ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை பொதுமக்களிடம் வீடு விடாக தெருமுனை பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
Next Story

