பதட்டமான சூழலில் இந்தியாவை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கமாக உள்ளது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் குற்ற சாட்டு.

X

பதட்டமான சூழலில் இந்தியாவை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கமாக உள்ளது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார்.
அரியலூர், மார்ச்30- பதட்டமான சூழலில் இந்தியாவை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கமாக உள்ளது என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ் மீதும் பற்றில்லை. தமிழ்நாட்டு மீதும் பற்றில்லை. தமிழர்கள் மீதும் மதிப்பில்லை என்று சிவசங்கர் கூறியுள்ளார். அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பெரும்பான்மையான கட்சிகள் கலந்து கொண்டு ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன. அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் தலைமையில் ஏழு மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும் தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, தொடர் முன்னெடுப்புகளை எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்படுத்துவது என்ற நடவடிக்கையை எடுத்த பிறகு நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்கள் தொகை 12 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விட பீகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் தொடர்ந்து, வளர்ச்சியில் ஈடுபடாமல் மக்கள் தொகை கட்டுப்பாட்டையும் மேற்கொள்ளாமல் 23 சதவீதத்தில் உள்ளனர். தமிழகத்தில் வசூலிக்கப்படுகின்ற ஜிஎஸ்டி தொகையில் பெருமளவு அவர்கள் மாநிலத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கின்றனர் . போன்ற மாநிலங்களுக்கு மிக அதிக அளவீடமாக கொடுக்கின்ற காட்சியை பலமுறை அந்த புள்ளி விவரங்கள் மூலம் எடுத்துக் கூறியும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கு மாற்றான பதிலை தான் கூறி வருகிறார். அவர் நிதி அமைச்சர் ஆக இருப்பதற்கான தகுதி குறைவானவராக நான் கருதுகிறோம். தொகுதி மறுசீரமைப்பு இதுவரை மோடியும், பாஜக தலைவர்களும் ஒரு தெளிவான அதிகாரப்பூர்வமான பதிலை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவாக விளக்க வேண்டும் இல்லாவிட்டால், இது தொடர்ந்து நாம் போராட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். மேலும் நமக்கு வரவேண்டிய கல்விக்கான நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான பங்கீடு, ஜிஎஸ்டியில் உரிய பங்கீடு ஆகியவை தமிழ்நாட்டிற்கு வரவேண்டும். எனவே இதை எல்லாம் வலியுறுத்தி தொடர்ந்து தமிழகம் ஒருமித்த குரலில் ஒலிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எதையாவது திடீர் என்று அறிவித்து அதன் மூலமாக ஒரு ஸ்தம்பித்துப் போகின்ற சூழலை உண்டாக்க வேண்டும். பதட்டமான சூழலில் இந்தியாவை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே மத பிரிவினை வாதத்தின் மூலமாக இந்தியாவை பதட்டமாக வைத்து தங்கள் கையிலே வைத்துக்கொள்ளலாம் என்று முயற்சித்தவர்கள், இன்றைக்கு இந்த மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு என்ற பெயரிலே சில குறிப்பிட்ட மாநிலங்கள் கையில் வைத்துக்கொண்டு மற்ற மாநிலங்களில் மிரட்டலாம் என்ற எண்ணத்தில் பாஜக தலைவர்கள் செயல்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் மூதறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அவரால் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் தமிழில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைக் கூட அறியாத மத்தியில் பவர்ஃபுல்லாக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் உயர் கல்வி படிப்புகள் கொண்டு வருவோம் என்று கூறுவது மக்களை தொடர்ந்து ஏமாற்றும் செயலாகவே உள்ளது என்று கூறினார். பொய் சொல்வதற்கென்று பிறந்த கட்சி பாஜக என்பதற்கு மீண்டும் ஒருமுறை அந்த கட்சியினுடைய முக்கிய தலைவர் அதுவும் இந்தியாவினுடைய உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமைச்சர் அமித்ஷா பொய் பேசுவது என்பது மிகுந்த த்திற்குரியது. வன்மையாக கண்டிக்கத்தக்கது தமிழ்நாட்டில் ஏற்கனவே முத்தமடைந்த கலைஞர் முதலமைச்சராக இருக்கின்றபோது பொறியியல் படிப்பதற்கு தமிழ் வழிக்கலாம் என்பதற்கு கொண்டுவரப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த பணிக்கின்ற வாய்ப்பு இருக்கிறது இப்படித்தான் வட இந்தியாவில் பேசுவார்கள் எந்த செய்தியும் உண்மை செய்தியை மாற்றி அவர்கள் ஒரு செய்தியை பொய் செய்தி பரப்புவார்கள் அந்த குழப்பல்ஸ் பிரச்சாரத்தை தமிழகத்தில் மீண்டும் மீண்டும் செய்யலாம் என்றுதான் அவர்கள் ஒவ்வொரு முறையும் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறார்கள் ஏற்கனவே மதம் ரீதியாக பிரிக்கலாம் பாத்தாங்க தமிழ்நாட்டுல அதுக்கு இடமில்லை முருகனுடைய வேலை தூக்கிக்கொண்டு சுற்றி வந்து பார்த்தார்கள் அதற்கு மக்கள் செவி சேர்க்கவில்லை இன்றைக்கு புதிதாக ஒரு கதை இந்த கதை ஏற்கனவே வந்து மோடி இங்கு வரும்போதுஇன்றைக்கு புதிதாக ஒரு கதை இந்த கதை ஏற்கனவே வந்து மோடி இங்கு வரும்போது தமிழில் பொறியியல் படிப்பதற்கான வாய்ப்பு தமிழகத்தில் ஏற்கவே முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்திருக்கிறார் மருத்துவக் கல்விக்கான தமிழ் படிப்பும் இருக்கிறது ஆய்வு செய்து பேச வேண்டும் ஒரு ஒன்றியத்தினுடைய மிக மிக சக்தி வாய்ந்த உள்துறை அமைச்சராக இருப்பவர் பொறுப்பற்ற தன்மையில் அண்ணாமலை போன்று பேசுவது என்பது கண்டிக்கத்தக்கது. நிர்மலா சேர்த்தாராமன் தமிழகத்திலிருந்து சென்றவர் என்பது பிஜேபியிவினர் நம்மளை ஏமாற்றும் வார்த்தை. அந்த அம்மாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. அந்த உணர்வு கிடையாது. இல்லனா தமிழ் படித்தால் நீங்கள் என்ன செய்ய முடியும், பிச்சை எடுக்கத்தான் போக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒரு மத்திய அமைச்சராக இருக்கிறவர் பேசுகிறார் என்றால், எவ்வளவு ஒரு கீழ்த்தரமான சொல் அது. பிரதமருக்கு அடுத்த நிலையிலே நிதி அமைச்சர் என்ற ஒரு பொறுப்பு மந்திரி சேவையில் இருக்கும் அந்த இடத்தில் இருந்து கொண்டு இந்த வார்த்தைகளை சொல்கிறார். அவருக்கு தமிழ் மீதும் பற்றில்லை. தமிழ்நாட்டு மீதும் பற்றில்லை. தமிழர்கள் மீதும் மதிப்பில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story