மரக்கறி அரைக்கும் ஆலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரித்து நாசமாகின

X
விருதுநகர் அருகே மரக்கறி அரைக்கும் ஆலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரித்து நாசமாகின விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சார்ந்தவர் பிர்லா இவர் விருதுநகர் அருகே பெரியவள்ளி குளம் பகுதியில் மரக்கறி கட்டைகளை வாங்கி அவற்றை அரைத்து விற்கும் தொழில் செய்து வருகிறார் இவர் ஆலை இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக ஆலையிலிருந்து புகை மண்டலமாக இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆலை உரிமையாளருக்கும் சூலக்கரை காவல் நிலைய காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர அங்கு வந்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் எரிந்த கரிக்கட்டைகளை தண்ணீர் அடித்து அணைத்தனர் இந்த தீ விபத்தில் லட்சம் மதிப்பிலான இயந்திரம் மற்றும் கரி கட்டைகள் தீயில் இருந்து நாசமாகியது இந்த விபத்துக்கு குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

