கீரப்பாளையம்: விசிக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

கீரப்பாளையம் பகுதியில் விசிக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம் கடைவீதியில் வெயிலின் தாகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆணைக்கிணங்க கடலூர் கிழக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கீரப்பாளையத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கீரை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருண் தலைமையிலும் மும்பை வேலு, மாநில துணைச் செயலாளர் செங்கதீர் முன்னிலையிலும் நடைபெற்றது.  இதற்கு சிறப்பு அழைப்பாளராக விசிக கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஓளி நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர் கொடுத்து மகிழ்ந்தனர். இதில் மாவட்ட அமைப்பாளர் அழகானந்தன், மகாலிங்கம், பசுபதி, தேர்தல் பொறுப்பாளர் ஜவகர், பழனி மற்றும் விசிக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story