வேலூர்: இழப்பீடு வழங்க உத்தரவு!

வேலூர்: இழப்பீடு வழங்க உத்தரவு!
X
சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடாக 87.71 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை சேர்ந்த சீனிவாசன்(42) இந்து அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கணவரின் இறப்புக்கு இழப்பீடு வழங்ககோரி அவரது மனைவி வாணிஸ்ரீ ஒருங்கிணைந்த நீதிமன்றம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரருக்கு இழப்பீடாக 87.71 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
Next Story