பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கருத்தரங்கம்

X

கருத்தரங்கம்
தஞ்சாவூர் நிப்டெம் நிறுவனக் கூட்டரங்கில் சமூகநலன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, சமூக நலன் மற்றும் மகளி உரிமைத்துறையின் சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்ப்பிப்போம்" திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான உறுப்பினர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளான. பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம். போதை பழக்கத்திற்கு அடிமையாதல், சமூக வலைதளங்களின் தாக்கம், பதின்ம வயதில் ஏற்படும் கர்ப்பம், மாதவிடாய் சுகாதாரம், பாலின சமத்துவம் ஆகியவற்றை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகள் உதவி எண் 1098 சைல்டு லைன், பெண்கள் உதவி எண் 181 குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும், பயிற்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி கையேடு மற்றும் 'CHAMPION OF SOCIAL EMPOWERMENT" சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழு தலைவிகள், உறுப்பினர்கள் 720 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்" என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் இரா.த.லதா, இணை இயக்குநர் /திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித்குமார், மாவட்ட மகளிர் அதிகார மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story