சிறு குறு தொழில் நிறுவனங்களில் வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு

சிறு குறு தொழில் நிறுவனங்களில் வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு
X
சிறு குறு தொழில் நிறுவனங்களில் வேளாண் கல்லூரி மாணவிகள் கள ஆய்வு செய்தனர்.
அரியலூர் மார்ச்.30- தந்தை ரோவர் வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரி மாணவிகள் சிறு குறு மைக்ரோத் தொழில் நிறுவனத்தில் கள ஆய்வு பயணம் மேற்கொண்டனர். அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் சிறந்து விளங்கும் பல்வேறு தொழில்களை வைத்து முன்னேறி வருபவர் முத்துலட்சுமி என்பவரை தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவிகள் சந்தித்தனர். அவரிடம் அவர் செயல்படுத்தும் தொழில்களான சணல் பை தயாரித்தல் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரித்தல் கூடை முடைதல் பானைகளில் படம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஒவ்வொரு தொழில்களின் செயல் முறைகளை மாணவிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் தொழில்களை எவ்வாறு துவங்குவது அதனுடைய பொருட்களை எங்கு வாங்குவது, ஒவ்வொரு தொழில்களிலும் மதிப்பு கூட்டுதல் அழகு படுத்துதல் எவ்வாறு என்பதையும் எப்படி அதை உற்பத்தி செய்வது மற்றும் அதை விற்பணை செய்வது எவ்வாறு என்பது அனைத்தையும் அவர் மாணவிகளுக்கு தெரிவித்தார். அனைத்த தொழில்களையும் கள ஆய்வு செய்ய சென்ற 10 மாணவிகள் சென்று தெரிந்து கொண்டனர். இது குறித்து மாணவிகள் தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது என கூறினர்.
Next Story