கோலியனூர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விழுப்புரம் எம்எல்ஏ

கோலியனூர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விழுப்புரம் எம்எல்ஏ
X
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நுாறு நாள் வேலை உறுதித்திட்ட நிதி 4,034 கோடி ரூபாயை தமிழகத்திற்கு தராத மோடி அரசை கண்டித்து கோலியனுாரில் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும், இதை எதிர்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டன குரல் கொடுத்து வருவதாகவும் பேசினார். பொருளாளர் ஜனகராஜ், கோலியனுார் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், அவைத் தலைவர் வழக்கறிஞர் கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், நகர இளைஞரணி மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் சவுந்தர ராஜன். துணைச் செயலாளர்கள் ஸ்ரீதர், ஜெயபால், ஜெயந்தி, ராஜகணேஷ், மாவட்ட பிரதிநிதி மணி, ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யப்பன், ஊராட்சி தலைவர் மணிவேல்.நிர்வாகிகள் நீலகண்டன், அய்யனார், சிவகுரு, மனோகர், ராவணன், பிரபா, பாலகிருஷ்ணன், மகாதேவன், பெருமாள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, கோலியனுார் தெற்கு, மேற்கு, காணை, கண்டமங்கலம், வானுார், கிளியனுார், கண்டமங்கலம் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story