மயிலம் அருகே துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என எம்எல்ஏ கோரிக்கை

மயிலம் அருகே துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என எம்எல்ஏ கோரிக்கை
X
சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்
மயிலம் சட்டசபை தொகுதியில் உள்ள வல்லம் ஒன்றியத்தில் கொங்கரப்பட்டு கிராமத்தில் துணைமின் நிலையம் பணிகள் துவக்கப்படுமா? என மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் கேள்வி எழுப்பினார்.கேள்வி நேரத்தின் போது அவர் பேசுகையில், 'மயிலம் சட்டசபை தொகுதி யில் உள்ள வல்லம் அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தில் கடந்த 2020-21ம் நிதி ஆண்டில் துணை மின் நிலையம் அமைக்க 5 கோடியே 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் எப்போது துவங்கும்' என்றார்.இதற்கு தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் கூறுகையில், 'இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் இந்த நிதியாண்டில் துவங்கும்' என்றார்.
Next Story