திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது

X
திண்டிவனம் ரோஷணை நகராட்சி தொடக்க பள்ளி (இந்து) ஆண்டு விழா நடந்தது.திண்டிவனம் கல்வி மாவட்ட தொடக்கப் பள்ளி கல்வி மாவட்ட அலுவலர் அருள் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். ஒலக்கூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், மேற்பார்வையாளர் அருணா, பயிற்றுநர் ஸ்ரீமுல்லை, கவுன்சிலர் தில்ஷாத்பேகம் முன்னிலை வகித்தனர்.விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.விழாவில், நண்பர்கள் அரிமா சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டியன் ரமேஷ், நகர தலைவர் சக்திவேல், வழக்கறிஞர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் பரிதாபேகம் நன்றி கூறினார்.
Next Story

