தமிழக முதல்வருக்கு நன்றி பாராட்டு விழா

X

மு க.ஸ்டாலின் ஓய்வில்லா சூரியனாக உழைத்துக் கொண்டு இருக்கிறார் ..ஆதித்தமிழர் கட்சி நிறுவனர் புகழாரம்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை என்.வி.திடலில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி பாராட்டு விழா ஆதித்தமிழர் கட்சி நிறுவனர் கு.ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார். மேலும் சிறப்பு அழைப்பாளராக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் அவர்கள் பட்டியலின சமூகத்திற்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்திருக்கிறார், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெண்கள் பயணிக்கு இலவச பேருந்து,மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை 1000 - ரூபாய் -பெண்கள்சுய உதவிக்குழு நிதி வழங்குதல்,இல்லந் தோறும் காவேரி கூட்டு குடிநீர் திட்டம், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, இன்னமும் மக்கள் நலனை மனதில் கொண்டு சிறப்பு திட்டங்களை செய்வதற்காக ஓய்வில்லா சூரியனாக உழைத்துக் கொண்டு இருக்கிறார் என்றும் பாராட்டி பேசினார். இதை எடுத்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களை பாராட்டிய போது ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் எம்.ஜி.ஆர் ஆகவும் கலைஞராகவும் பார்க்கக்கூடிய ஒரே மாமனிதர் எங்கள் அமைச்சர்அர.சக்கரவாணி அவர்கள் தான் என்று புகழாரம் சூட்டினார்.
Next Story