திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேச்சு.

மதுரை மேலூரில் நேற்று திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு மேலூர் இளைஞர் அணி சார்பாக ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு நிதிப்பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுவரையறை ஆகியவற்றிற்கு எதிரான திமுகவின் நிலை குறித்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் இக் கூட்டத்தில் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story