சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு

ஓடசல்பட்டி கூட்ரோடு அருகே சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நெருப்பாண்ட குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் இவர், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேர நேற்று மாலை அவர் பணி முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் செம்மண அள்ளி பகுதியில் சென்றபோது, சாலையோரம் இருந்த பெயர் பலகையில் அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சிவஞானம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மதிகோன்பாளையம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story