வனத்துறை எச்சரிக்கை

வனத்துறை எச்சரிக்கை
X
பண்ணாரி அம்மன் சோதனை சாவடி அருகே சாலையோரம் சிறுத்தை நடமாடியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் காரணமாக வறட்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் குளம் குட்டைகள் வறண்டு வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு சக்தி மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் வருவதும் வருவது தொடக்கதையாகி வருகிறது. இந்நிலையில் பண்ணாரி அம்மன் சோதனை சாவடி அருகே உள்ள வனப்பகுதியில் சாலையோரம் திடீரென சிறுத்தை ஒன்று நடமாடியது. நீண்ட நேரமாக அந்த சிறுத்தை சாலையோரம் நடமாடியது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தன செல்போனில் படமாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது வனப்பகுதியில் வெயில் தாக்கம் காரணமாக தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகிறது. பண்ணாரி அம்மன் சோதனை சாவடி அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் வனப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. அதைப்போல் விலங்குகளை செல்போனில் படம் எடுத்து அவைகளுக்கு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. இடம் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story