நல்லம்பள்ளியில் நாட்டுக்கோழிகள் விற்பனை ஜோர்

நல்லம்பள்ளி நாட்டுக்கோழி வார சந்தையில் 4 லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்த வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வாரச்சந்தை நடைபெறுகிறது இந்த வார சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் கிருஷ்ணகிரி நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம் நேற்று காலை கூடிய வார சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாட்டுக் கோழிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது நேற்று ரகம் மற்றும் அளவைப் பொறுத்து நாட்டுக்கோழிகள் 350 ரூபாய் முதல் 1600 ரூபாய் வரையில் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கு நாட்டுக்கோழிகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story