ராமநாதபுரம் மத்திய தொழில்படையினர் வருகை

ராமநாதபுரம் தமிழ்நாட்டின் பாரம்பரிய தப்பாட்டத்திற்கு ஏற்றவாறு அதிகாரிகள் முன்பாகவே குத்தாட்டம் போட்ட CISF வீரர்கள்_ கடலோர மாவட்ட மக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சைக்கிளில் வருகை தந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்;தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் சக வீரர்கள் தனியார் சிலம்பம் பள்ளி மாணவர்கள் என பலரும் மலர்தூவி மேளதாளம் முழங்க வீரர்களுக்கு ஆரத்தி எடுத்து, வரவேற்றனர் கடல் வழி தீவிரவாத ஊடுருவல் மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்க, கடலோர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சைக்கிள் பேரணியை துவங்கியுள்ளனர் இந்நிலையில் வெஸ்ட் பெங்காலில் இருந்து மார்ச் 7ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அவரால் துவங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஆனது ராமநாதபுரம் மாவட்டம் வந்து சேர்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம் வருகை தந்த பெண்கள் உட்பட 80 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு தனியார் பள்ளி சார்பிலும் தனியார் கல்லூரி சார்பிலும் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீரர்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் CISF வீரர்கள் மலர்தூவி, சால்வை அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அங்கிருந்த ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து அகம் மகிழ்ந்தனர். பட்டிணம் காத்தான் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது காரைக்குடியில் இருந்து வருகை தந்த தப்பாட்ட குழுவினரின் மேளத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சிலர் உற்சாக மிகுதியில் கைகளை தூக்கி, நளினத்துடன் நடனம் ஆடினர். சைக்கிளில் வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு களைப்பு நீங்கி உற்சாகமடைந்தனர் 25 நாட்கள் இந்திய கடலோரப் பகுதியில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து மார்ச் 31ஆம் தேதி கன்னியாகுமரியில் தங்களது பயணத்தை முடிக்கின்றனர். வழி நெடுகிலும் மீனவர்கள் மற்றும் ராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி மற்றும் முகமது சதக் பெண்கள் கல்லூரி மாணவிகளை சந்தித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போதை பொருளை முற்றிலும் ஒழிக்க அந்நிய நாட்டுக் கப்பல்கள் மற்றும் படகுகள் குறித்தான தகவல்கள் தெரிந்தால் உடனுக்குடன் அதனை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி செல்வதாகவும், கடலோர மக்களுக்கான விழிப்புணர்வு பேரணிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
Next Story