மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் திமுக சார்பில் வழங்கினர்

X

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கினர்
தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் லட்சுமிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் லட்சுமி புரம் கிளைகழக செயலாளர் கணபதி தலைமை தாங்கினார். அச்சம் குன்றம் கிளைக் கழகச் செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார், ஒன்றிய பிரதிநிதி எம்பி முருகன் வரவேற்று பேசினார், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி காளிமுத்து அவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார். இதில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் செல்வக்கொடி ராஜா மணி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகையா, மாவட்டஅமைப்புசாரா ஓட்டுனர் அணி தலைவர் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிசாமி, முத்தம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் பி முருகன், பரங்குன்றாபுரம கிளைக் கழக செயலாளர் மனோகரன், ராமனூர் கிளைக் கழக செயலாளர் கணேசன் ஒன்றிய பிரதிநிதி பரமசிவம் , ஊத்துமலை கோல்டன் ராஜா , கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story