நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,

நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,
X
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,
திருப்பத்தூர் மாவட்டம் நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். -------------------- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்கள், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கடந்த 30 நாட்களாக நோம்பு கடைபிடித்த இஸ்லாமியர்கள் புது ஆடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் மேலும் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்புத் தொழுகை நடத்தினர். இந்த தொழுகையில் இஸ்லாமியர்கள் மத்திய அரசு கொண்டு வரும் வகுப்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர் .
Next Story