சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி

சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி
X
சிறப்பு தொழுகை நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் சந்தைப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள சந்தைப்பேட்டை ஜாமியா பள்ளிவாசலில் இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை ஹஸ்ரத் நெய்னா முஹம்மது உஸ்மானி நடத்தினார். அதனை தொடர்ந்து ஹஸ்ரத், முஅத்தின் ஆகியோருக்கு புத்தாடை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜமாத் துணைத் தலைவர் நிஜாமுதீன், செயலாளர் பஷீர், துணை செயலாளர் ஆஷாத் உள்ளிட்ட நிர்வாகிகள், ஜமாத்தினர் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
Next Story