பேச்சிப்பாறை :  பழங்குடி மக்கள் மாநாடு 

பேச்சிப்பாறை :  பழங்குடி மக்கள் மாநாடு 
X
கன்னியாகுமரி
குமரி மாவட்ட காணிக்காரர்கள் மகாசபை சார்பில் காணிக்காரர் என பழங்குடி மக்களின் வன உரிமைகள் வென்றெடுக்கும் இரண்டு நாள் மாநாடு பேச்சிப்பாறையில் நடைபெற்றது. முதல் நாளில் காயல் கரை மலைத்தலைவர் முருகன் காணி தலைமையில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.      இதில் அகில இந்திய வன உரிமைகள் சட்ட செயற்பாட்டாளர் பிஜோய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த பொது மாநாட்டிற்கு காணிக்காரர்கள் மகாசபை தலைவர் மற்றும் வன உரிமைகள் சட்ட செயலாக்க மாநில அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர் ராஜன் காணி  தலைமை வகித்து கோரிக்கை விளக்க உரையாற்றினார். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.        மாநாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடி பகுதிகளை உள்ளடக்கி புதிதாக ஒரு சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு அதனை பட்டியலின பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், 1663 ஆம் வருடம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா நிலவரி நீக்கி காணிக்காரர்களுக்கு தானமாக வழங்கிய நிலப்பரப்பில் அனைத்து குடும்பங்களுக்கும் அதிகபட்சம்  10 ஏக்கர் நிலம் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story