கயத்தாறில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை!

கயத்தாறில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை!
X
கயத்தாறில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கயத்தாறில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முகமது நைனார் சும்மா பள்ளிவாசலில் தொழுகையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முகமது நைனார் ஜூம்மா பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ஈத் திடலுக்கு பேரணியாக பாத்தியம் ஓதிக்கொண்டு நடந்து சென்றனர். பின்னர் அங்கு 6. 40 மணிக்கு தொழுகை ஆரம்பம் ஆகியது. அதனை தொடர்ந்து 7.40 வரை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்தத் தொழுகையின் போது தலைமை இமமாம் முகமது கனிப், மற்றும் துணை இமாம் இப்ராஹிம் ஆகியோர் இந்த சிறப்பு தொழுகையை நடத்தினர். இதில் பள்ளிவாசல் தலைவர் முகைதீன் மற்றும் செயலாளர் பீர்முகம்மது, பொருளாளர் துணைத் தலைவர் உள்பட ஏராளமான கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத் தொழுகையைத் தொடர்ந்து அங்கு வரும் ஏழை எளியவர்களுக்கு உதவிகளையும் பொருட்களையும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தனர்
Next Story