தர்மபுரியில் மரக்கன்றுகளை நடவு செய்த நீதியரசர்

தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து நெடுஞ்சாலைகளும் பசுமையாக மாறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சுந்தர் தகவல்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.சுந்தர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் இன்று பிற்பகல் மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இரண்டு மரக்கன்றுகளை பாலித்தீன் கவர்களில் நட்டு வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதியரசர் எஸ்.சுந்தர்,மாநில சட்டப்பணிகள் குழு மாவட்ட முழுவதும் உள்ள சட்டப் பணிகள் குழு மூலம் பொது இடங்கள், சாலையோரங்களில் மரம் நடுவதற்கு திட்டம் வகுத்துள்ளோம். இதில் ஒரு மாதத்திற்குள் ஆயிரம் மரக்கன்றுகளை பாலிதீன் கவர்களில் நட்டு அதனை ஓராண்டு வரை மராமத்து வந்து அதன் பிறகு அரசு பொது இடங்கள் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் உதவி செய்கின்றனர். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுகின்ற பட்சத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா நெடுஞ்சாலைகளும் பசுமையாக மாறும். தற்பொழுது வனத்துறையினர் 11 லட்சம் மரக்கன்றுகளை வைத்துள்ளதுள்ளனர். இதனை நட்டு பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
Next Story