கரூரில்,ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.

கரூரில்,ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
கரூரில்,ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களின் புனித திருநாளாக ரமலான் பண்டிகை உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று மாலை பிறை பார்த்த பிறகு முறைப்படி இஸ்லாமியர்களுக்கு ரமலான் பண்டிகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர். இதேபோல கரூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில், கரூர், திருமாநிலையூர் பகுதியில் 3 இடங்களில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் சமத்துவம் சகோதரத்துவம் தலைதூக்கி இந்தியா முழுவதும் பிரகாசிக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தொழுகையில் ஈடுபட்டனர்.
Next Story