மது குடிக்க கத்தியை காட்டி பணம் கேட்டவர் கைது

X
திருச்சி ஸ்ரீரங்கம் செட்டி தோப்பை சேர்ந்தவர் ரமேஷ் (49). இவர் நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நெடுந்தெரு மந்தையில் நடந்து சென்ற போது, ஸ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்த ரவுடி பிரபு (42) என்பவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்த தால், கத்தியை காட்டி ரமேசை மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்
Next Story

