புதிய சமுதாய கூடத்திற்கு பூமி பூஜை.

மதுரை மேலூர் அருகே புதிய சமுதாய கூடம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், குறிச்சிபட்டி ஊராட்சியில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோவிலில் உங்கள் தொகுதி முதல்வர் திட்டத்தின் கீழ் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணியினை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பி. பெரியபுள்ளான் என்ற செல்வம் பூமி பூஜை செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெள்ளலூர் நாட்டு அம்பலகாரர்கள், முன்னாள் எம்.எல்.ஏ கா. தமிழரசன், மேலூர் முன்னாள் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, முன்னாள் யூனியன் வைஸ் சேர்மன் பாலகிருஷ்ணன், திமுக மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குறிச்சிபட்டி சேதுராமன், கிடாரிப்பட்டி சுரேஷ், மேலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திர பிரபு, உள்ளிட்ட திமுக, அதிமுக நிர்வாகிகள், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தின கலாவதி, மேலூர் யூனியன் பொறியாளர் பத்மநாதன், மேலாளர் பாலமுருகன், உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story