இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
X
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நான் சொல்வதை எடப்பாடி கேட்க வேண்டும் கேட்காவிட்டால் செங்கோட்டையனை பயன்படுத்துவதர்கான திட்டம் தான் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு. எடப்பாடிக்கு தெரியாமல் செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தது எடப்பாடி கட்சி நடத்துவதற்கான லாயக்கற்ற தன்மையை காட்டுகிறது. நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி என்கிற வடிவேல் காமெடி போல தான் விஜயின் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் படத்திறப்பு விழாவிற்கு வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருப்பத்தூர் பயணியர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பாரத பிரதமர் மோடி ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தலைநகர் நாக்பூருக்கு சென்ற சம்பவம் குறித்து கூறும்போது முதன் முதலாக பாரதப் பிரதமர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஆதரிக்கும் போக்கை நிரூபித்துள்ளார் ஆர்எஸ்எஸ் இயக்கம் கனி தரும் மரங்களில் ஊடுருவும் புல்லுருவி போன்றது விவசாயிகள் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் அந்தப் புல்லுருவி மரத்தையே பட்டுப்போக செய்துவிடும் என்றும் கொள்கை ரீதியாக அதிமுகவும் பாஜகவும் ஒன்று சேர முடியாது அப்படி இருக்கும்போது எடப்பாடி சம்பந்தி பல்வேறு வழக்குகளில் உள்ளார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது இரட்டை இலை சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்கிற பிரச்சனை இருக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாக பொதுச் செயலாளராக நீடிக்க முடியுமா முடியாதா என்று பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க முடியாத சூழ்நிலையில் பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து டெல்லிக்குச் சென்று சந்திப்பை நடத்தி வந்திருக்கிறார். அதே கட்சியில் இருக்கும் மற்றொரு முக்கியமான தலைவர் செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சரை சென்று சந்தித்து வருகிறார் இது சம்பந்தமாக செய்தியாளர்கள் கேட்கின்ற போது அவர் போய் சந்தித்து வந்தது தனக்கு தெரியாது என்று கூறும் பொழுது கட்சி நடத்துவதற்கு எடப்பாடி லாயக்கற்றவர் என்கிற தன்மையைத்தான் காட்டுகிறது. ஏனென்றால் உயர் ரக பாதுகாப்பான ஒய் பிரிவு பாதுகாப்பு செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டதை பார்க்கும்போது நான் சொல்வதை எடப்பாடி கேட்காவிட்டால் செங்கோட்டையனை பயன்படுத்துவேன் என்று மிரட்டும் விதமாகத்தான் பார்க்க முடியும் இந்த சூழலில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியா அல்லது அண்ணாமலையா அல்லது தற்பொழுது உருவாக்கப்பட்டு வரும் செங்கோட்டையனா யார் முதல்வர் வேட்பாளராக இருப்பார்கள் திமுகவை பொறுத்தவரை மு க ஸ்டாலின் தான் முதலமைச்சர் வேட்பாளர் ஆனால் அதிமுகவில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா கூறுவதைப் பார்த்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் ஐயம் இருக்கிறது என்று கூறினார்.. தொடர்ந்து விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டபோது நானும் ரவுடி நானும் ரவுடி காமெடி போல் தான் அதற்கு மேல் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறியவர் எம்பிரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை இடிக்கும் போல் இருப்பது குறித்த காட்சி குறித்து கேள்வி எழுப்பிய போது முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாட்டுக்கு சொந்தமானது அதை இடிப்பது போல் முயற்சிகளோ அல்லது அது சம்பந்தமான காட்சியை அந்த திரைப்படத்தில் இருந்தால் நிச்சயமாக அதை அப்புறப்படுத்த வேண்டும் அதேபோல் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியதற்கு எல்லா இடங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை நடக்க தான் செய்கிறது ஆனால் அதை கட்டுக்குள் கொண்டு வருகின்ற நிகழ்வையும் நாம் பார்க்க வேண்டும் ஆனாலும் கூட தமிழக அரசு உளவுத்துறையை பலப்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுபவர்கள் மீது தண்டனை வழங்க கூடிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
Next Story