மழை நீர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய நீரை கொண்டு செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு

மழை நீர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய நீரை கொண்டு செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு
திருச்செங்கோடு நகராட்சி 1,7,8,10வது வார்டுகளில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திய நீர் சூரியம்பாளையம் வழியாகச் செல்ல அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று தன் எழுச்சியாக சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் சூரியம்பாளையம் பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு சட்டைய புதூர் அண்ணா சிலை நான்கு ரத வீதிகள் வழியாகஊர்வலமாக வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது ஊர்வலத்தின் நிறைவாக திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கையை எடுத்து கூறினார்கள் சட்டமன்ற கூட்டத்திற்காக சென்ற சட்டமன்ற உறுப்பினர்ஈஸ்வரன் சென்னையில் இருப்பதால் நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் ராயல் செந்திலிடம் தங்களது குறைகளை எடுத்து கூறினார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் செந்தில்மற்றும் ஊர்வலமாக வந்தவர்களில் ஒருவர் பேசிய போது திங்கட்கிழமை சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து ஆய்வு செய்து யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் எம்எல்ஏ அலுவலகத்திற்கு நேரில் வந்து பொதுமக்களிடம் உங்களுடைய கோரிக்கைகள் சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி தான் விரைவில் தீர்வு காணப்படும் என நானும் நம்புகிறேன் திடீரென இதுபோல் கூட்டமாக கூடிவருவதை விட குறிப்பிட்ட 10 பேர் வந்து நேரடியாக கோரிக்கைகளை சொல்லுவது தான் சரியாக இருக்கும் என அறிவுறுத்தினார்.வரும் திங்கட்கிழமை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பிரச்சனைக்குரிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 300 பேர் திடீரென ஊர்வலமாக நகருக்குள் வலம் வந்ததால் திருச்செங்கோடு நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story