விழுப்புரத்தில் அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது

X

அரசு ஓட்டுநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு அரசுதுறை வாகன ஓட்டுநர்கள் தலைமை சங்க மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.மாநில தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சிவக்குமார், மாநில துணை தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் விஜயக்குமார் வரவேற்றார். பொது செயலாளர் குமார் தீர்மானங்கள் குறித்தும், பொருளாளர் முருகன் நிதிநிலை அறிக்கை வாசித்தனர்.கூட்டத்தில், கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். அனைத்து அரசு துறை வாகனங்களுக்கும் வாகன காப்பீடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
Next Story