ஆண்டிமடம் அருகே வில்லாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

X
அரியலூர், மார்ச் 31- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் வில்லாநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை,பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் 2024 - 25 ம் ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது. ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர் நெப்போலியன்சுதன்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குளோரியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கசந்தாமணி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராசாத்தி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி உதவி ஆசிரியர் சங்கீதா அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பேசுகையில் வில்லாநத்தம் பள்ளியில் பயிலக்கூடிய மாணவமாணவிகள் உலக அளவில் உயர் பதவி வகிக்கக்கூடிய அளவில் கொண்டு வருவோம் என உறுதி அளித்தார். ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தனது சிறப்புரையில் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு இணங்க அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் சிகரம் பள்ளி வயது மாணவச் செல்வங்களை அரசு பள்ளிகளில் சேறுங்கள் எனக் கூறினார். அனைத்து சூழலிலும் வெற்றிவாகை சூட உதவும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே ஆரம்பக் கல்வியை அரசு பள்ளிகளில் கட்டாயம் சேருங்கள் என பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். சிறந்த ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் எதிர்காலத்தில் மனித மாண்புடன் விளங்கவும் மனிதநேயத்துடனும்,மன தைரியத்துடனும் விளங்கி போற்றப்பட வேண்டியவர்களாக மாணவ மாணவிகள் விளங்க வேண்டும் எனவும் கூறினார். மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அரசு சிறார் திரைப்படம், மன்ற செயல்பாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த போட்டிகள் வினாடி வினா,கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, நாடகம், கலைத்திருவிழா போன்ற பல போட்டிகளை அரசு முன்னெடுத்து செயல்படுத்துவதன் மூலம் கல்வி மட்டுமல்லாது மாணவர்களின் தனித்திறனை வளர்க்க பெரும்பங்காற்றுகிறது அரசு பள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பெற்றோர்களே எனக் கூறினார். விழாவில் மாணவர்களின் கலைத்திறன் படைப்புகளான மதுவினால் ஏற்படும் தீமைகள், இயற்கையை பாதுகாப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செயற்கையை கைவிடுவோம் போன்ற நாடகங்கள், ஆங்கில சொற்பொழிவு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாசிரியர் என அனைவரும் பரிசுகளை வழங்கினர்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் கசந்தாமணி நன்றி கூறினார்.
Next Story

