கடன் வசூல் ஆகாதால் விவசாயி தற்கொலை

கடன் வசூல் ஆகாதால் விவசாயி  தற்கொலை
X
பூதப்பாண்டி
பூதப்பாண்டி அடுத்த மாங்குளம் பகுதி சேர்ந்தவர் மனோகரன் (54). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மனோகரன் ஊருக்கு வந்து குடும்பத்துடன் வசித்து விவசாயம் செய்து வந்தார்.       இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷன் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் மனோகரன் பல்வேறு நபர்களுக்கு கடனாக பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் பணம் வாங்கியவர்கள் யாரும்  கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.       இதனால் மன வேதனையில்  தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story