போதையில் வடமாநில சுற்றுலா பயணி பலி

போதையில் வடமாநில சுற்றுலா பயணி பலி
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை ரயில்வே கேட் அருகே சுமார் 60 வயது மதிக்க நபர் குடிபோதையில் மயங்கிய நிலையில் நேற்று கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் அவர் இறந்தார். அவரைப்பற்றி எந்த தகவலும்  இல்லாததால் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்தது.  இது குறித்து தென்தாமரை குளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.      இவர் வட மாநிலத்தவர் போல இருந்ததால் சுற்றுலா வந்தவர்களிடம்  அந்த கோணத்தில் விசாரணை நடந்தது. இந்த நிலையில் அசாம் மாநில கிப்சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தங்களுடன் கன்னியாகுமரி சுற்றுலா வந்த தர்மகாந்த புகான் என்பவரை காணவில்லை என்று புகார் அளித்தார்.       இதை அடுத்து போலீசார் இறந்து போனவரின் உடலை காட்டிய போது, இறந்தவர் தர்ம காந்தபுகான்  என்பது தெரிய வந்தது. சுற்றுலா வந்தவர்கள் குமரி பகவதி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்து ஓய்வு எடுத்த போது தர்ம கந்தபுகான் மட்டும் தனியாக சென்று மது அருந்தி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  தென்தாரை குளம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story